கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் புனரமைக்கப்படாத வீதிகள்-மக்கள் விசனம்(காணொளி)

467 0

konawilகிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது அன்றாடப் போக்குவரத்துக்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்கமைய கிளிநொச்சி கோணாவில் கிழக்குப் பகுதியிலுள்ள பிரதானவீதி முதல் குடியிருப்பு வீதிகள் வரை எவையும் புனரமைக்கப்படாமையால், குறித்த பகுதிகளில் வாழும் சுமார் 355இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடப் போக்குவரத்துக்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி புதுமுறிப்பு அக்கராயன் வீதியிலிருந்து குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாது பாரிய குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது.

இதனால், தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக சில இடங்;களில் வெள்ளநீர் தேங்கியும், நீர் அடித்துச் செல்லும் வாய்க்கால்கள் போன்றும் காணப்படுகின்றன.

இதேவேளை குடியிருப்பு வீதிகளும் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன், தற்போது பெய்துள்ள மழையினால் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதுடன், சாதாரண துவிச்சக்;கர வண்டியிலோ அல்லது கால்நடையாகவோ பயணிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் இந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் முதியவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகத்திடம் வினவியபோது கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் உள்;ள வீதிகளில் ஏராளமான வீதிகள் புனரமைக்;க வேண்டிய நிலையிலுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் குறித்த வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் குறித்த கிராமத்தின் வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.