சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணை களை மேற்கொள்வதற்காகக் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தனிச் சிறப்புச் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த தாவது,
<p>போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஊடாக சட்டவிரோதமாகப் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்களை கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய இவ்வாறான சொத்துக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப் படவுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவுக்குக் கீழ் ஸ்தாபிக்கப்படும் இந்த விசாரணை பிரிவில் செயற்படுவதற்காகத் தெரிவுச் செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சில ருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விரைவில் இதனை ஸ்தாபிப்பதுடன். சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கும் சொத்துகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை அரசுடமையாக்குவது மாத்திரமின்றி, அதனை எவ்வாறான முறையில் அரசுட மையாக்குவது என்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை தொழிநுட்பங்களை பயன்படுத்தி தகவல் அறிவதற்கும் இந்த பிரிவுக்குப் பயிற்சிப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறா சட்ட விரோத சொத்துக்களை வைத்துக் கொண்டுள்ள குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் அவர்களுக்கும் இவ்வாறான சொத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதா ? என்பது தொடர்பிலும் குறித்த பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும்.
இதன்போது போதைப் பொருள் கடத்தல் , கறுப்புபணம் , பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக கிடைக்கப் பெறும் பணம் தொடர்பிலே விசாரணைகள் மேற்கொள்ளப் படுவதுடன் , இந்த விசாரணைகள் அனைத்துமே குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழே இடம்பெறும்.