வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளுக்கு எதிராக உள்ளுராட்சி அமைச்சின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிர மதவாத மற்றும் இனவாத பிக்குகள் செயற்படுவது காணப்படுகிறது என்றும், மட்டக்களப்பு மாவட்ட மங்களராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமணதேரர், கிராம சேவையாளர் ஒருவரை பயமுறுத்தி எச்சரித்தமை தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சபை முதல்வரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சபையில் இன்று நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.