சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

273 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

தமிழகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் – 88
செங்கல்பட்டு – 2,349
சென்னை – 15,042
கோவை – 1,193
கடலூர் – 395
தர்மபுரி – 252
திண்டுக்கல் – 815
ஈரோடு – 172
கள்ளக்குறிச்சி – 709
காஞ்சிபுரம் – 2,130
கன்னியாகுமரி – 1,559
கரூர் – 81
கிருஷ்ணகிரி – 170
மதுரை – 3,273
நாகை – 152
நாமக்கல் – 151
நீலகிரி – 312
பெரம்பலூர் – 41
புதுக்கோட்டை – 447
ராமநாதபுரம் – 980
ராணிப்பேட்டை – 952
சேலம் – 898
சிவகங்கை – 816
தென்காசி – 678
தஞ்சாவூர் – 616
தேனி – 1,287
திருப்பத்தூர் – 205
திருவள்ளூர் – 3,317
திருவண்ணாமலை – 1,459
திருவாரூர் – 251
தூத்துக்குடி – 1,992
திருநெல்வேலி – 1,380
திருப்பூர் – 253
திருச்சி – 977
வேலூர் – 1,673
விழுப்புரம் – 781
விருதுநகர் – 2,071
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 270
உள்நாடு – 91
ரெயில் நிலைய கண்காணிப்பு – 16
மொத்தம் – 50,294