ஒருகொடவத்தையில் 200 கிலோகிராம் கொக்கேய்ன் மீட்பு

323 0

kokeignஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து 200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 200 கிலோகிராம் கொக்கேன் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனி இறக்குமதி செய்யும் போர்வையில், பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு இந்த கொக்கேன் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலிருந்த 13 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது ஒரு கொள்கலனிலிருந்து இந்த கொக்கேன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.