அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள 2/3 பெரும்பான்மை அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தில் நல்லாட்சி அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதென்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை தற்போதைய அமைச்சர்கள் சிலர் கூறுவதாகவும் சாடினார்.
அதேபோல் இந்த ஒப்பந்தத்துக்காக இலங்கைக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மிகவும் பாரதூரமானவை எனவும் தெரிவித்தார்.