ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை தனது தேர்தல் பிரசார மேடையில் ஏற்றிக்கொள்வதற்கு ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி அளித்திருந்தாரென தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, அவருக்கு நன்றிகளையும் கூறிக்கொண்டார்.
அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
மாத்தறை மாவட்டம் தேர்தலில் புதுமைகளை படைப்பது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான சிறந்தொரு ஆய்வுக்கூமெனவும், அந்த ஆய்வு கூடத்தை தான் பல தடவைகள் பயன்படுத்திகொண்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் சகல கட்சிகளும் ஒன்றுபட்டு நடத்தகூடிய தேர்தலொன்றுக்கான ஆடித்தளத்தை தான் மாத்தறையிலேயே இட்டதாக தெரிவித்த அவர், 1994 களில் தேர்தல் சுதந்திர கட்சியின் பிரசார கூட்டத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பிக்கு அழைப்பு விடுத்ததால் அப்போது தான் இருந்த கட்சியின் தலைவி தன்னை சந்தேகித்தார் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் அக்கட்சி உறுப்பினர்களை தனது மேடைக்கு அழைப்பிக்க அனுமதி கோரிய போது அவர் அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டதை நன்றியுடன் நினைவுகூறுவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு மாத்தறையிலிருந்தே பொலித்தின் இல்லாத தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தாகவும் தெரிவித்தார், அதுபோன்ற அரசியல் கலாசாரத்தை மேம்படுத்தவே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சிந்திக்கிறார் என்றார்.