ரூ. 15 ஆயிரம் கோடி நிலத்தை அபகரிக்க முயற்சியா?: பா.ஜனதா தலைவருக்கு அழகிரி பதில்

265 0

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் 15 ஆயிரம் கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி என்ற பா.ஜனதா தலைவர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ். அழகரி பதில் அளித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் 15 ஆயிரம் கோடி நலத்தை அபகரிக்க முயற்சி நடைபெற்றதாக தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக்காக, நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை’’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் இருந்து யாரும் இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க முடியாது. கட்டளையிடவும் முடியாது. ஆலோசனை வேண்டுமென்றால் கூறலாம். அதுவும் கூறுவதில்லை. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனை’’ என்றார்.