பொதுமக்கள் தங்கள் வீட்டு மின்சார கட்டணத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை மின்சார வாரியம் ஏற்படுத்தி உள்ளது.பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கான மின்சார கட்டண தொகையை அறிந்துகொள்ள மின்சார கட்டண விவரம் இணையத்தளத்திலோ( TANGEDCOBill Status ) அல்லது மின்சார கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் ( TANGEDCOOnline Payment Portal ) மூலமாகவோ தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய மாத மின் கட்டண தொகையையே (பி.எம்.சி.) கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
www.tangedco.gov.in இணையதள முகவரிக்கு சென்று, ‘மின்கட்டண சேவைகள்’ (பில்லிங் சர்வீஸ்) பகுதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள மின்கட்டண விவரம் (பில் ஸ்டேட்டஸ்). இணையதள மின் கட்டணம் (ஆன்லைன் பில் பேமென்ட்), கணக்கு விவரம் (அக்கவுண்ட் சம்மரி), மொத்த தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பத்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறி உள்ளது.