மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை தேர்தல் பிரச்சார அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த தேர்தல் பிரச்சார அலுவலகம் தாக்கப்பட்ட போது அருகில் இருந்த உணவகம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.