கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பான்வெல்துவ, சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் இது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் முகத்தில் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போகஹவெல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.