நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்கள் தொடர்பாக 3684 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிலுள்ள முறைப்பாட்டு பிரிவுக்கு 16 ஆம் திகதி 4.00 மணி முதல், 17 ஆம் திகதி 4.00 மணிவரையிலான காலப்பகுதியிலேயே மேற்படி முறைபாடுகள் கிடைத்துள்ளனவெனவும் தெரிவித்தார்.
இவற்றில் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான மத்திய நிலையத்துக்கு 17 முறைபாடுகளும், மாவட்ட தேர்தல் முறைபாடுகள் தொடர்பான நிலையத்துக்கு 151 முறைபாடுகளும் 16 ஆம் திகதியன்று பதிவாகி இருந்தனெவென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு 17 ஆம் திகதியன்று தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான மத்திய நிலையத்துக்கு 801 முறைபாடுகளும், மாவட்ட தேர்தல் முறைபாடுகள் தொடர்பான நிலையத்துக்கு 2883 முறைபாடுகளும் கிடைத்திருந்தனவென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.