அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

251 0

அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனையை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணை குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடலில் குறைந்தது 40 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவி சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மாதம் 30-ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நவீனமயமாக்கலுக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை இயக்குனர் மார்க் லுயிஸ், 2025-ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட ஹைபர்சோனிக் முன்மாதிரி ஆயுதங்களின் சோதனை முடிவடையும் என்றும், அதன் பிறகு அந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.