முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 219 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
14 நாட்கள் கண்காணிப்பு மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின்போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.00 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ் குறித்த அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்கள் 7 பேருந்துக்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 06 பெண்களும் 03 சிறுவர்களும் 210 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 02ஆம் திகதி தென்கொரியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்கள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.