மெய்ப்பொருள் காண்பது அறிவு

1095 0

யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தில் யாழ் பல்கலைக்கழகம் ஒரு மையில் கல் . ”மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் மகுட வாசகம் யாழ். பல்கலைக்கழகத்தின் உயர்வு நிலையை பறைசாற்றுகின்றது.

யாழ். பல்கலைக்கழத்திற்குள் பயிலச் செல்லும் மாணவர்கள் மெய்ப்பொருளை கண்டறிவார்கள் என்றெ இந்த சமுகம் நம்புகிறது. காத்திருக்கிறது.

1974 இல் யாழ்.பல்கலைகழக வளாகம் ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராக பேராசிரியர் கைலாசபதி விளங்கினார். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. என்பதற்கு அமைவாக பேராசிரியர் கைலாசபதி தமிழ் சமூகத்தின் அறிவொளியாக விளங்கினார். அந்த ஒளியி்ல் இருந்து பல தீபங்கள் ஒளிர்ந்தன

இருபதாம் நூற்றாண்டு தந்த தலை சிறந்த அறிஞர்களில் கைலாசபதியும் ஒருவர் என்ற பெருமை தமிழ் இனத்திற்கான பெருமையாகும்

பின்னர் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒரு புலமைச் சகாப்தமாக கருதப்ப்டார் அவரது காலத்தில் யாழ்.பல்கலைக்கழத்தில் இலக்கியம் முதல் அரசியல்வரை சகல விடயங்களும் மார்க்சிய நோக்கில் பார்கப்பட்டு  .தமிழ் சமூகம் வழிநடத்த்பட்டது.

அதன் பின்னர் போராசியர் துரைராஜா தமிழர்கள் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கை போன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தார்.

“தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர்”  என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.

பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி . போராசியர் துரைராஜா இவர்கள்து காலங்களில் யாழ்ப்பாண பல்கல்கழகம் ”மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக  திகழ்ந்தது.

ஆனா்ல் ”மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் மகுட வாசகத்தை உடைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை என்ன?

கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (17.07.2020) பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை காரணமாக காட்டியுள்ளார்.

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டுள்ளார்.

இருப்புக்களை இழந்து போன ஈழத் தமிழினத்தின் தற்காப்பு அரணாக அறிவு தான் விளங்கப் போகின்றது. அதையும் இல்லாமல் செய்ய   ஓர் அறிவாளியை வெளியேற்ற துணிந்து விட்டது யாழ். பல்கலைக்கழக பேரவை.

மெய்ப்பொருள் காண்பது அறிவா? அரசியலா?