மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் நாஸர் நஜாத் (19) என்ற இளைஞரே குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவராவார்.
மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமயத்தில் மட்டக்களப்பு பகுதியில் இருந்து பொலனறுவை பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதியதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.