யாழ் மாவட்டத்தில் கரவட்டி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண்ணுக்கு அவரது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் 2016 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து (CBG) தையல் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த பெண் வாழ்வாதாரம் எதுவுமின்றி நான்கு குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருவதனையும்இ தையல் தொழில் செய்து தன்னால் தனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியுமென அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கஇ அவருக்கான தையல் இயந்திரத்தை அமைச்சர் அவர்கள் 23.11.2016 அன்று யாழ்ப்பணத்தில் அமைந்துள்ள தனது அமைச்சில் வைத்து வழங்கிவைத்தார்.