பெரியார் சிலை அவமதிப்பு- கோவையில் பரபரப்பு

260 0

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இன்று அவமதிப்பு செய்துள்ளனர். சிலையின் மீது காவி சாயத்தை ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.