முல்லேரியாவ பிரதேசத்தில் 06 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் படி நேற்று (16) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய ஹிம்புடான, அங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேநகபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.