கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

264 0

நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ள உள்ள திருத்தப் பணிகள் காரணமாக  கொழும்பின் பல பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 10 மணிநேர நீர் விநியோகத்தடை  அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை 18 ஆம் திகதி இரவு 8 மணி முதல் இந்த 10 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த தினத்தில் அம்பத்தல பகுதியில் பிற்பகல்  2 மணிமுதல் 16 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொலன்னாவ, நாஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் இவ்வாறு 16 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.