சிறிலங்காவில் கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்தவர்களுக்கு தொற்றில்லை!

304 0

சிறிலங்காவில் கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 114 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 368 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது.