சிறிலங்காவில் இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 8 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
ஏனையவர்களில் கட்டாரில் இருந்து வருகைத்தந்த மூவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைதந்த ஒருவரும் அடங்குகின்றனர்.
அத்துடன், 669 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இரண்டாயிரத்து 7 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.