பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: விஜயகாந்த்

319 0

201611240833539104_vijayakanth-emphasis-should-appoint-physical-education_secvpfபள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகளில் உடற்பயிற்சியும் கற்பித்து, விளையாட்டுக்கென்று உடற்பயிற்சி ஆசிரியர் இருக்க வேண்டும். அரசு நிர்ணயப்படி பள்ளி பரப்பளவு மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்று கல்வி விளையாட்டு துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 26 மாநிலங்கள் மற்றும் 87 மாநகரங்களில் 7 முதல் 17 வயது மாணவ, மாணவியர்கள் குறித்த ஆய்வில், வரையறுக்கப்பட்ட பரப்பளவு விளையாட்டு மைதானம் இல்லை என்றும், மாணவ, மாணவியர் போதிய உடல் எடை மற்றும் உயரம் மிகவும் குறைவாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலை நகரங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானங்கள் நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவு இல்லாத பள்ளிகளின் விவரங்களை பார்வையிட்டு, உடற்பயிற்சி ஆசிரியர் இருப்பதையும், விளையாட்டு சாதனங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்கிற நிலையையும் அரசு தெரிவிக்கவேண்டும். இன்றைய பள்ளி மாணவ, மாணவியர் தான் இந்த நாட்டை காப்பாற்ற போகும் வீரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் என்பதை கருத்தில் கொண்டு உரிய நட வடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.