#முல்லைத்தீவு- வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராம் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ளது. தண்டுவான் கிராமத்தின் பிரதான வருமானம் விவசாயம் மூலமே பெறப்படுகிறது. இக்கிராமத்திலுள்ள மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நெடுங்கேணிக்கே செல்ல வேண்டியிருந்தது.
17.07.1986 ஆம் ஆண்டு வழமைபோல முல்லைத்தீவிலிருந்து நெடுங்கேணி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மக்கள் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல்வேறு தேவைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். அன்றையதினம் நெடுங்கேணிப் பிரதேசமானது சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் கொப்பேக்கடுவ தலைமையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அதற்கு சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தியும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது. அதேவேளை பேருந்தில் சென்ற தண்டுவான் மக்கள் தமது இடங்களில் இறங்கியபின் நெடுங்கேணிக்குப்போகமுடியாத நிலையில், ஓட்டுநர் பேருந்தைத் திருப்பி முல்லைத்தீவு நோக்கி ஓட்டிச் சென்றபோதுபேருந்தைப் பின்தொடர்ந்து சென்ற உலங்குவானூர்தி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதுடன், கிட்டத்தட்டதண்டுவான் பாடசாலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஒரு கி.மீ. தூரத்தில் வைத்து பேருந்து மீது றொக்கற்தாக்குதலை மேற்கொண்டது. இத்தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் உட்பட பதினேழு பேர் உயிரிழந்தனர். பதின்மூன்று பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோகளின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. சேகு அப்துல்காதர் விவசாயம் 55
02. நாகமணி தட்சணாமூர்த்தி அரசஊழியர் 30
03. சுப்பிரமணியம் சபாரத்தினம் – 28
04. சிவலிங்கம் விவேகானந்தம் – 17
05. குமாரசாமி வேலாயுதம்பிள்ளை – 22
06. முத்துக்குமார் கணேஸ்வரி – 35
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 நூல். @NESOHR