அமெரிக்காவிற்கான ஐ.நா தூதராக இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே (வயது 44), தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தற்போது பதவி வகித்து வருகிறார். குடியரசுக் கட்சியின் இளம் தலைமுறைத் தலைவர்களில் ஒருவரான நிக்கி மிகவும் திறமைசாலி என்று பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருபவர்.
இந்நிலையில் நிக்கி ஹாலேவை அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.
தேசிய அளவில் செயல்பட வேண்டிய திறமைசாலி இவர் என்று டிரம்ப் ஆலோசகர்கள் அவருக்கு எடுத்துரைத்ததாகவும், அதன் காரணமாக டிரம்ப் நிக்கியைத் தேர்ந்தெடுத்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வின்போது, டொனால்ட் டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.