ஊர்காவற்றுறையில் த.தே.கூக்கு தாக்கிய சம்பவத்தின் கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில்

298 0

151007110619_jaffna_court_640x360_bbc_nocredit-720x480தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தின் கண்கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் யாழ்.மேல் நீதிமன்றத்தில் சாட்சியகாக மன்றில் முற்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு குறித்த வழக்கின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நா.நிசாந்தன் தெரிவித்தள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகளுக்காக யாழ்.தீவகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியினர் மீது ஊர்காவற்றுறைப் பகுதியில் வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இத் தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 26 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதும், இவ்வழக்கு மிக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து, சாட்சிய பதிவுகளுக்காக தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இதன்படி குறித்த வழக்கு நேற்றும் வடமாகாணத்திற்கான மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் தோன்றிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நா.நிசாந்தன் வழக்கின் ஆரம்ப உரையினை மன்றில் நிகழ்த்தினர். இவ்வுரையிலேயே இவ்வழக்கில் கண்கண்ட சாட்சியங்களை மன்றில் முற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இவர் தனது ஆரம்ப உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:-
2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஊர்காவல்துறை பிரதேசத்தில் இவ் வழக்கின் குற்றம்சாட்டப்பட்ட நான்கு எதிரிகளும் 50க்கு மேற்பட்ட நபர்களுடன் இனைந்து சட்டவிரோத பொதுகூட்டமொன்றை கூட்டி இருவரை படுகொலை செய்திருந்தனர். அத்துடன் 26 பேரிற்கும் படுகாயம் விளைவித்திருந்தனர். இது தொடர்பாக இவர்களுக்கு எதிராக 47 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 40சாட்சிகள் பட்டியலிப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவ் வழக்கில் மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், கணகரட்னம், ரவிராஜ் ஆகியோர் கண்கண்ட சாட்சியங்களாக உள்ளார்கள். அத்துடன் இச் சம்பவத்தில் காயமடைந்து பாதிக்கப்பட்ட 19 பேர் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்த போதும் குறித்த வழக்கானது ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்போது உயிருடன் இல்லை என பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மரண விசாரனை அறிக்கையை சமர்பித்த பின்னர் சுருக்க முறையற்ற விசாரனையின் போது ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தவற்றை சான்று பொருள் கட்டளை பிரிவின் கீழ் இனைப்பேன் எனவும் சட்ட வைத்திய அதிகாரி பொலிஸ் அலுவலகர்களை அழைத்து தெளிவுபடுத்துவேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் 26பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ள இவ் வழக்கினை விஷேட வழக்காக எடுத்து விரைவாக விசாரனை நடாத்த மன்று உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பாக சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கையானது இன்றில் இருந்து தொடர் வழக்கு விசாரனையாக மன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.