இந்தியாவில் உள்ள 2,500 அகதிக் குடும்பங்கள் இலங்கை வரவுள்ளனர்

278 0

article_1431079696-img1326இலங்கையில் இருந்து இந்தியாவிற்குச் சென்று அகதிகளாக வாழும் 2 ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாட்டிற்கு திரும்பி வருவதற்க தயாராக உள்ளனர் என்று யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
நாட்டிற்கு வரவுள்ள இக் குடும்பங்கள் மீளவும் குடியேறிக் கொள்வதற்கான தேவையான உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (ஒபர் – சிலோன்) ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து அண்மையில் மீளத்திரும்பியவர்களக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலமை தாங்கி உரையாற்றும் போதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கச் சென்ற ஏராளமானவர்கள் அங்கு அகதி முகாங்களில் தங்கியுள்ளார்கள்.
மிக நீண்ட காலமாக அவர்கள் அங்கு தங்கியுள்ளதால் அவர்களுடைய கடும்பங்களில் பெருக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கு திரும்பி வரவேண்டியவர்களுடைய தொகையும் அதிகரித்துள்ளது.
இருப்பினம் முதற்கட்டமாக ஒரு தொகை மக்கள் நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார்கள். அவர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மீள்குடியேற்ற, புணர்வாழ்வு அமைச்சின் கீழ் அவர்களுக்கான வீட்டுத்திட்டம், உலர் உணவுகள் வழங்குவதற்கான அனுமதி அமைச்சில் இருந்து கிடைத்துள்ளது. இவ் உதவித்திட்டங்கள் தேவைப்படுபவர்களுடைய விபரங்களும் அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் அவர்களுக்கான உதவிகள் கிடைக்கும். மேலும் மீள்குடியேறும் அவர்கள் எதிர் கொள்ளும் பதிவுப் பிரச்சினைகளும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடமாடும் சேவைகள் மூலம் மிக விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.