தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதிவியேற்ற பின்னர் கட்சியை வலுப்படுத்தும் விதமாக மண்டல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அந்த கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.