மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் பகிரங்க அழைப்பு

294 0

mahintha_12017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பற்றி பொய்ப் பிரசாரம் செய்யாமல் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேரடி விவாதத்துக்கு வருமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் நேய வரவு – செலவுத் திட்டம் ஒன்றை நாம் சமர்ப்பித்துள்ளோம்.

அதில் மக்களுக்கு அதிக நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறைகூற முடியாது.

ஆனால், எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அதை எதிர்க்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியான – முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஸவால் அவரது காலத்தில் 10 ரூபாவைக்கூட நிவாரணமாக வழங்க முடியவில்லை.

ஆனால், நாம் அதிக நிவாரணங்களை வழங்கியுள்ளதால் பொறாமையால் அவர் இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பொய் கூறித் திரிகின்றார்.

இது தொடர்பில் விவாதிப்பதற்கு நாம் அவரை அழைக்கின்றோம். அவர் எங்கு அழைத்தாலும் தான் வருவதற்குத் தயார். அம்பாந்தோட்டைக்கு வேண்டுமென்றாலும் வருகின்றேன் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.