வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில், வடக்கு அரசின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நிதிக் கூற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு – செலவுத்திட்ட விவாதம் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 66வது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில், வடக்கு மாகாண அரசின் நிதி அமைச்சரும் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு அரசின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நிதிக் கூற்று அறிக்கையை சமர்பிக்கவுள்ளார்.
வடக்கு அரசுக்கு, அடுத்த ஆண்டு மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள நிதி மற்றும் செலவீனம் தொடர்பிலான சுருக்க அறிக்கையாகவே இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு – செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரமே இடம்பெறும் என்றும், மூன்று தினங்கள் வரையில் இது நடைபெறலாம் என்றும் வடக்கு மாகாண பேரவைச் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.