இந்தியாவில் முகாங்களில் இருந்து மீண்டும் இலங்கை வந்து குடியேறியவர்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்வு (படங்கள் இணைப்பு)

260 0

k800_img_6012_resizeஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி முகாங்களில் இருந்து தற்போது நாடு திரும்பியுள்ளவர்களுடைய தேவைகள் தொடர்பான ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலினை இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தினால் (ஒபர் – சிலோன்) ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் இக் கலந்துரையாடலில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜான், இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (ஒபர் – சிலோன்) தலைவி சூரியகுமாரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலுக்காக இதுவரையில் இந்தியாவில் இருந்து மீண்டும் வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிக் கொண்டவர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையாக வீட்டுத்திட்டம், சொந்தக் காணி, பிரஜா உரிமை பதிவுகள், பிறப்பு, இறப்பு, விசாகப் பதிவுகள் செய்து கொள்ளல், தொழில் வாய்ப்பு, கல்வி வசதிகள், சுகாதாரம், வைத்தியம், உலர் உணவு விநியோகம் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

k800_img_5977_resize k800_img_6007_resize