நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்”

221 0

1986650630untitled-1இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இரகசிய பாதுகாப்பு அறிக்கைகளை அடிப்படையாக கொண்டே தான் இதனை குறிப்பிடுவதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டதாக தகவல் வெளியாகியது எனினும், அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து வௌியேறி பிறநாட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையை சேர்ந்த 37 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு தான் நேரடியான பதிலை வழங்காது போனால், நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்” என்று செய்தி வெளியாகும் என குறிப்பிட்டார்.

எனவே, விஜயதாச ராஜபக்ஷ பொய் கூறினார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்கள் எவரும் இணைந்து கொள்ளவில்லை என்பது மாத்திரம் என்னால் கூறமுடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.