அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி காவல்துறைமா அதிபருடன் பேசுவேன்!

251 0

dm-swaminathanயாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினர் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு விரைவில் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் காணிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் காவல்துறையினரையும் அகற்றி அக்காணிகள், வீடுகளை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பேச்சு நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த ஒரு தொகுதி காணி மற்றும் வீடுகள் அண்மையில் பொதுமக்களின் மீள் குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டது.

இருப்பினும், விடுவிக்கப்பட்ட வீடுகள் மற்றும் காணிகளிலும் காவல்துறையினர் தொடர்ந்தும் தங்கியுள்ள நிலையில் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலையில் உள்ளனர்.

இவை தொடர்பாக விரைவில் காவல்துறைமா அதிபருடன் பேச்சு நடாத்தி தீர்வினைப் பெற்றுத் தருவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.