நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

251 0

indexநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரால் இன்று எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

தற்போதைய வரவு செலவுத்திட்ட விவாதம் நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பாவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணுகுமுறை தொடாபில் அவதானமாக இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், மாலபே நெவில் பெர்ணாண்டோ தனியார் வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மனிதவள அபிவருத்தி தொடர்பான கண்காணிப்பு தெரிவுக் குழுவின் அறிக்கையில் இந்த பரிந்துரை முன்வைத்துள்ளது.

அத்துடன், மாலபே தனியார் மருத்து கல்லூரியை கண்காணிப்பதற்கு நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.