விடுதலைப் புலிகளுடன் தொடர்பில்லை என கூறியது அச்சத்தில் – ஈழ அகதி சாட்சியம்

292 0

sun-640x381தமக்கு அரசியல் அந்தஸ்த்து கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தாலேயே, தாம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புக்கொண்டிருக்கவில்லை என்று தாம் கூறியதாக, கனடாவின் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சண் சீ கப்பலின் மூலம் 492 இலங்கையர்களை கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு அழைத்துச்சென்ற நால்வர் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த 492பேரில் ஒருவரான சசிக்குமார் கணபதிப்பிள்ளை என்பவர் சாட்சியமளித்தார்.

ஏற்கனவே கனேடிய எல்லை சேவை முகவரக அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தின்போது, தாம், விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்ததாக சாட்சி குறிப்பிட்டார்.

கனடாவில் தமக்கு அரசியல் அடைக்கல கோரிக்கைக்கு இந்த விடயம் பாதகமாக அமைந்துவிடும் என்பதன் காரணமாகவே தாம் அவ்வாறு கூறியதாக சாட்சி தெரிவித்தார்.

அறங்கூறுநர்களிடம் தமது சாட்சியத்தை அளித்த, சசிக்குமார், தாம் 7 வருட அடிப்படையில் விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கையை கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

இதன்போது தமக்கு கொமாண்டோ பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் தாம் குண்டுகளை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இறுதியான, மூன்று வருடக்காலப்பகுதியில் போராளிகளுக்கு குண்டுகளை தயாரிப்பது குறித்து கற்பித்தலில் ஈடுபட்டதாகவும் சாட்சி கூறினார்.

இந்தநிலையில் விசாரணை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன.