நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் தாமதமானது, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான உண்மை மற்றும் நீதி வழங்கலை தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஸ்ரெபன் ஜே ரெப் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதிப் பொறிமுறை ஒன்றை நியமித்து அதனை செயற்படுவதற்கு முன்னதாக, விசாரணையாளர் நியமித்து குற்றச்சாட்டுகளை ஒழுங்குப் படுத்தும் செயற்பாடுகளையேனும் மேற்கொள்ள முடியும்.
அனால் இதனை செய்யாதிருப்பதானது, அரசாங்கம் நீதிவழங்கும் செயற்பாடுகளை தவிர்க்க முயற்சிக்கிறது என்ற அடிப்படையிலேயே நோக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.