கண்டியில் பாடசாலை மாணவர் ஒருவரை நகர மத்தியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் சமாதானம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரால் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி அண்மையில் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டன.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக இது வரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இது குறித்து விரைவில் விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு, அமைச்சர் சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.