22 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு

275 0

central-415x26022 அரச நிறுவனங்களின் பிரதானிகளை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளது.

அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதற்பகுதியில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனம் தேசிய லொத்தர் சபை முதலீட்டு சபை உள்ளிட்ட 22 பொது நிறுவனங்களின் பிரதானிகள் இவ்வாறு அழைக்கப்படவுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் குறித்த விசாரணை ஜனவரி பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.