ஈழத்த இளைஞருக்கு சிங்கபூரில் சிறை

484 0

jail1சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்துக்கு செல்ல முயற்சித்த ஈழத்து இளைஞர் ஒருவருக்கு சிங்கபூரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரராஜா கஜனன் என்ற 20 வயதான அவர், போலி இந்திய கடவுச் சீட்டைக் கொண்டு, தாம் ஒரு பிரித்தானியர் என்று அடையாளப்படுத்தி, நியுசிலாந்து செல்ல முயற்சித்துள்ளார்.

அவர் கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி மற்றுமொரு பிரித்தானியரின் உதவியுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் இருவருக்கும் 12 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.