விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்தார்

373 0

indexவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

கொழும்பில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

இதன்போது தாம் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாhர்.

அதேநேரம் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும், வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு கவலைத் தரும் விடயமாக இருக்கிறது.

உண்மையில் அரசாங்கத்திற்கு வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை இருந்தால், காவற்துறையினரை அதிக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் செயற்பாடு இல்லை என்றும், நாட்டை ஐக்கியப்படுத்தவே இந்த தீர்வு முன்வைக்கப்படுகிறது என்றும் அவர் இதன்போது கூறினார்.

மேலும் வடக்கு – தெற்கு புரிந்துணர்வு இன்மையே பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கான காரணம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.