டேவிட் கெமருனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

4723 0

டேவிட்-கேமரன்2ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று மக்கள் கருத்துகணிப்பில் தீர்வானதன் பின்னர் அதற்கு எதிராக நேற்று லண்டனில் பாரிய எதிர்ப்பார்ட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இந்த எதிர்பார்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.
அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை ஏந்தியவாறு, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருனுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டுமா என்பதற்கு அவர் மக்கள் கருத்துகணிப்பு வாக்கெடுப்பை நடத்தினார் என்ற காரணத்திற்காகவே டேவிட்; கெமரூனை ஆர்ப்பாட்டகாரர்கள் விமர்சித்தனர்.
கடந்த ஜீன் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் கருத்து கணிப்பில், பிரித்தானியர்களில் 52 வீதமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
எனினும் லண்டன், ஸ்கொட்லோண்ட் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியன, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்றே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment