ஹிலாரி கிளிண்டனிடம் விசாரணை இல்லை-டிரம்ப் முடிவு

346 0

201611231030558326_email-issue-hillary-clinton-interrogation-trump-no-decided_secvpfஇ-மெயில் விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டனிடம் விசாரணை நடத்தும் முடிவை புதிய அதிபர் டிரம்ப் கைவிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கிறார்.

2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக ஒபாமா அதிபராக பதவி வகித்த போது அவரது அரசில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு துறை மந்திரி ஆக இருந்தார். அப்போது அரசு தகவல்களை தனியார் இ-மெயில் சர்வர்கள் மூலம் அனுப்பியதாகவும் அதனால் ரகசியங்கள் வெளியே கசிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் கிளப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய டொனால்டு டிரம்ப் இ-மெயில் விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டன் மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டார்.

நான் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றதும் ஹிலாரி மீது குற்ற விசாரணை நடத்தி அவரை சிறையில் தள்ளுவேன் என சூளுரைத்தார். தற்போது வெற்றி பெற்று அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.

எனவே, இ-மெயில் விவகாரம் குறித்து ஹிலாரி மீது விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக ஹிலாரி கிளிண்டன் மீது விசாரணை எதுவும் நடத்த டிரம்ப் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து டிரம்பின் ஆலோசகர் கெல்லியன் கான்வே கூறிய போது, அமெரிக்காவின் பெரும் பாலான மக்கள் ஹிலாரியின் நேர்மையின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வைக்கவில்லை. இது அவருக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் இ-மெயில் விவகாரம் தொடர்பாக ஹிலாரி மீது விசாரணை நடத்தும் எண்ணம் டிரம்புக்கு இல்லை. இதன் மூலம் அவருக்கு உதவி புரிந்துள்ளார் என்றார்.

தனியார் இ-மெயில் சர்வர்களை ஹிலாரி கிளிண்டன் பயன் படுத்தியது தொடர்பாக எப்.பி.ஐ. உளவு நிறுவனம் விசாரணை நடத்தியது. அதில் அவரது இத்தகைய நடவடிக்கைகள் கவனக் குறைவாக நடந்துள்ளது. எனவே அவர் மீது குற்றம் சாட்ட முடியாது என கூறிவிட்டது.