கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் அதனை மூன்று நாட்களில் மாற்றிவிட்டார்கள் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 3 தொகுதி களில் நடந்த தேர்தல்களிலும் ஆளும் அதிமுக வெற்றி பெற்றுள் ளது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள் கிறேன். இதுபோல் மேற்குவங்கம், மத்திய பிரதேசம், திரிபுரா மாநிலங் களிலும் இடைத்தேர்தல் நடைபெற் றுள்ளது. அனைத்து மாநிலங்களி லும் ஆளும் கட்சிகளே வெற்றி பெற் றுள்ளன. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்பது மீண்டும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணி குறித்து அந்த 4 பேரிடம்தான் கேட்க வேண் டும், எனக்கு எதுவும் தெரியாது. கறுப்புப் பணம் வைத்திருந்தவர் கள் அதனை 3 நாட்களில் மாற்றி விட்டார்கள். பாதிக்கப்பட்டிருப்பது சாதாரண மக்கள்தான்.
தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனம் தண்ணீர் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்க தீர்ப்பு. இந்த தடை நிரந்தரத் தடையாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் எந்த நதியிலும் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என, தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நடுநிலையோடு விசாரிக்க வேண்டும். தமிழகத்தை வறட்சியால் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட் டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.