தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் பணியகம் படையினரால் சுற்றிவளைப்பு.

383 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் கொக்குவிலில் அமைந்துள்ள பணியகம் இன்று திடீர் என்று படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
அதன்போது மக்கள் முன்னணியினரின் முக்கிய உறுப்பினர்கள் ளுழழஅ ஊடாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பணியகத்திற்;குள் வந்த இரணுவத்தினர் இங்கு நீங்கள் கரும்புலிகள் நினைவு நாளை நினைவு கூறுவதாக தங்களுக்கு தகவல் வந்தாக அச்சுறுத்தும் தொனியில் பேசினார்கள். அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதைக் கண்டவர்கள் அங்கிருந்து வெளியேறி பணியகத்திற்;கு முன்பாக இப்போதும் குவிந்து நின்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவண்ணம் உள்ளனர்.