காரைதீவில் கைக்குண்டு மீட்பு

315 0

granade-440x270-720x480அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் வீதி 2ஆம் குறுக்கு வீதி புனரமைக்கப்பட்டது.

இத் திட்டம் தொடர்பான விளம்பரப் பலவகையை நாட்டுவதற்காக, நேற்றையதினம், வீதியை, அலவாங்கினால் தோண்டும்போது நிலத்திலிருந்து, கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அதனைப் பார்வையிட்டதுடன்,  பொத்துவில் – அறுகம்பையிலுள்ள குண்டு மீட்கும் விசேட அதிரடிப்படையினருக்குத் தெரியப்படுத்தினர். இது தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.