கிளிநொச்சியில் தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம் 10 அடி 9 அங்குலமாக அதிகரித்தமையினால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாய்கின்ற வெள்ள நீரானது இரணைமடு சந்தியில் இருந்து இரணைமடுக் குளத்திற்கான பிரதான வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பாலத்தின் ஊடாக பாய்கின்றது.
குறித்த பாலத்தின் வேலைகள் முடிவடையாத நிலையில் இருப்பதனால் குறித்த பாலத்திற்கு அருகாமையில் சிறிய பதில் பாதை போட்டப்பட்டு போக்குவரத்து நடைபெறுகின்றது.
பாய்ந்து வருகின்ற வெள்ளநீர் குறித்த பாதையினை ஊடறுத்துப் பாய்வதனால் குறித்த பதில் பாதை சிறிது சிறிதாக நீருடன் அடித்துச்செல்லப்பட்டுக் கொண்டுள்ளது.
இம்;மழை இவ்வாறே தொடருமானால் குறித்த பாதையின் போக்குவரத்து தடைப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.