மஹிந்தவின் ஆலோசகராக வாசுவின் மனைவி

316 0

ahi-1மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தனது மனைவி 10 வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசகராக கடமையாற்றினார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம் பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொலைகள், ஊழல்கள், மோசடிகளில் ஈடுபட்ட முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவரே வாசுதேவ என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தினார்.

ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் பத்து ஆண்டுகள் ஆலோசகராக செயற்பட்ட அவரது மனைவி சம்பளம் மற்றும் வாகனத்தையும் பெற்றவர், ஆனால், தற்போது வாசுதேவ ஹீரோ போல பேசுகிறார் எனவும் நளின் பண்டார சாடினார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே வாசுதேவ நாணயக்கார தனது மனைவியைப்பற்றி கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசகர் நிலையை அடைவதற்காக தனது மனைவிக்கு தேவையான தகுதிகள் இருந்தது என்றும், நான் அமைச்சராக இருந்த காரணத்தினாலேயே தன் மனைவி ஆலோசகராக பொறுப்பேற்றுக் கொண்டார் எனவும் வாசுதேவ தெரிவித்துள்ளார்.