சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலி அண்மையில் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டு இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க கடந்த 16ஆம் திகதி தனது பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர், கரந்தெனியவில் உள்ள சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைத் தனியாகவும், இராணுவப் புலனாய்வு வீரர்களைத் தனியாகவும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அவரது இந்தக் கலந்துரையாடலின்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.