தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

355 0

download-2யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்தாக்கப்பட்டமைதொடர்பானவழக்குயாழ்ப்பாணமேல்நீதிமன்றத்தில்இன்றுநடைபெற்றது.யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட விசாரணை 10 நாட்களுக்கு தொடர் விசாரணையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இன்றையதினமும் விசாரணை நடைபெற்றது.

ஊர்காவற்றுறை ஜே-54 கரம்பன் மேற்கு, கிராம சேவையாளர் றொபின்சன் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பிடியாணை நிறைவேற்று உத்தியோகத்தர் ஆகியோர் தமது சாட்சியங்களை பதிவு செய்தனர்.சாட்சியத்தின் போது தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நெப்போலியன் என்ற அழைக்கப்படும் ரமேஸ் செபஸ்ரியன் மற்றும்  மதன் என்று அழைக்கப்படும் நடராசா மதனராசா தமது பிரிவில் தற்போது இல்லை என்று தமது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது சந்தேக நபர்களாகிய அன்ரன் ஜீவராசா, நமசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் அஜராகியிருந்தனர்.இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முதலாவது, இரண்டாவது சந்தேக நபர்கள் இல்லாமல் வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதியளித்தார்.

இன்றையதினம் சாட்சியமளிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா மற்றம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இருந்தும் இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேசவன் சயந்தன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவை சேனாதிராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சாட்சியமளிப்பு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.2001ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறைப் பகுதிக்கு சென்ற போது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் 24 பேர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முடியப்பு றெமீடியஸ் மற்றும் அரச சட்டத்தரணியாக நாகராசா நிசாந்தன் ஆகியோர்ஆஜராகியிருந்தனர்.நாளையும்தொடர்ந்துவிசாரணைநடைபெறும்என்றஅறிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது கமல்ஸ்ரோன் கமல் மற்றும் ஏரம்பு பேரம்பலம் ஆகியோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.