தமிழகம் புதுச்சேரியில் ரயில்மறியல்-50 பேர் கைது

399 0

arrestதமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு தமிழக – புதுவை அரசுகள் 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மங்களூர் – புதுச்சேரி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

முன்னதாக உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு, மீனவர் விடுதலை வேங்கைகள் கழகத் தலைவர் மங்கையர் செல்வன் தலைமையில் ஏராளமானோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை அடுத்து, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.